/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
போலி பாஸ்போர்ட் 2 பேர் சிக்கினர்
/
போலி பாஸ்போர்ட் 2 பேர் சிக்கினர்
ADDED : மே 26, 2024 12:45 AM
திருச்சி:போலி ஆவணங்களால் பாஸ்போர்ட் எடுத்து மலேஷியா செல்ல முயன்ற, இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் இருந்து நேற்று அதிகாலை மலேஷியாவுக்கு 'ஏர் ஏசியா' விமானம் புறப்படவிருந்தது. இதில் பயணம் செய்ய, சிவகங்கையைச் சேர்ந்த ஜபருல்லா, 48, சுப்பிரமணியன், 40, ஆகிய, இருவரும் திருச்சி விமான நிலையம் வந்தனர்.
அவர்களிடம் பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்ததில், இருவரும் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்து, வேலைக்காக மலேஷியா செல்லவிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் இமிகிரேஷன் அதிகாரிகள் விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
அண்மைக்காலமாக, போலி ஆவணங்களால், திருச்சியில் இருந்து வெளிநாடு வேலைக்கு செல்ல பலர் முயற்சித்து சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.