/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த 2 பெண்கள் கைது
/
நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த 2 பெண்கள் கைது
ADDED : ஜூலை 28, 2024 02:50 AM
லால்குடி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில், லால்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
மூவரும், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த முரளி, 48, அவரது மனைவி மகேஸ்வரி, 37, உறவினர் சிவரஞ்சனி, 48, என தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்த போலீசார், இரண்டு நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், கிணத்துக்கடவு பகுதியில், வனவிலங்கு வேட்டைக்கு செல்வோருக்கு விற்பனை செய்வதற்காக, திருச்சியில் நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களை வாங்கிச் செல்வது தெரியவந்தது. அவர் யாரிடம் துப்பாக்கிகளை வாங்கினார் என்பது குறித்து மூவரையும் கைது செய்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.