/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திமிங்கிலத்தின் எச்சம் பதுக்கிய 3 பேர் கைது
/
திமிங்கிலத்தின் எச்சம் பதுக்கிய 3 பேர் கைது
ADDED : செப் 02, 2024 03:51 AM
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் வனத்துறை தடை செய்த பொருட்கள் பதுக்கி இருப்பதாகவும், காப்புக்காட்டில் மரங்கள் வெட்டப்படுவதாகவும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
மணப்பாறை, மருங்காபுரி காப்புக்காடு பகுதில் வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, பொய்கைமலை பகுதியில் புரசு மரங்களை வெட்டிக் கொண்டிருந்த இடையபட்டியை சேர்ந்த முனியப்பன், 28, குமாரவாடி கிராமத்தை சேர்ந்த முருகேசன், 45, ஆகியோரை விசாரித்தனர்.
அவர்கள், காடப்பிச்சாம்பட்டி, செம்மலை, மருங்காபுரி காப்புக்காடுகளில் மாமரங்களை வெட்டி, மரப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை, குமாரவாடியை சேர்ந்த தேக்கமலை, 47, என்பவரிடம் விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்தது.
தேக்கமலை வீட்டை சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து, வன உயிரின சட்டப்படி மூவரையும் கைது செய்தனர்.