/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
துவக்கப்பள்ளிக்கும் "லேப்டாப்' ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
/
துவக்கப்பள்ளிக்கும் "லேப்டாப்' ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
துவக்கப்பள்ளிக்கும் "லேப்டாப்' ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
துவக்கப்பள்ளிக்கும் "லேப்டாப்' ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
ADDED : ஜூலை 12, 2011 12:23 AM
திருச்சி: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளிகளுக்கு, மூன்று லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் எல்.சி.டி., புரொஜக்டர் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி நகரக்கிளை செயற்குழு கூட்டம் நடந்தது. நகரத்தலைவர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். நகரச் செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினரான நீலகண்டன், மாவட்டச் செயலாளர் ஆல்பர்ட் தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான தர ஊதியம் பெற்று வந்த இடைநிலை ஆசிரியருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தர ஊதியத்தை 4,200 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும். கடந்த 2007ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்வழிக்கற்றல் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து, புத்தகவழி கல்வியை அமல்படுத்தவேண்டும். தமிழக அரசு சார்பாக, அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு மூன்று லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் எல்.சி.டி., புரொஜக்டர் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளிகளுக்கும் தமிழக அரசு வழங்கவேண்டும். திருச்சி நகரத்தில் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊதியமாக 1,500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதித்தொகையை வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி நகராட்சி, மாநகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கழிவறைகளை, அந்தந்த வார்டுகளில் உள்ள துப்பரவு பணியாளர்களே சுத்தம் செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.