ADDED : ஜூலை 28, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, சிறுகளப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். அதே ஊரில் உரக்கடை நடத்தி வரும் இவர், சில நாட்களுக்கு முன் அழுந்தலைப்பூர் மற்றும் புள்ளம்பாடி வங்கிகளில் அடகு வைத்த நகைகளை மீட்டு வீட்டில் வைத்திருந்தார்.
அதன் பின், இளங்கோவனின் தாய் மின்னல் கொடி, 70, என்பவரை மட்டும் வீட்டில் விட்டு, குடும்பத்துடன் கேரளா சுற்றுலா சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 80 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். மின்னல் கொடி புகார்படி, காணக்கிளியநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.