ADDED : ஆக 30, 2024 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாநகராட்சி மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த அன்பழகன் உள்ளார். மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், மேயர் தலைமையில் நடந்தது.
மாநகராட்சியின், 63வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பொற்கொடி எழுந்து, கையில் வைத்திருந்த ஸ்வீட் பாக்சை, அங்கிருந்த பணியாளரிடம் கொடுத்து, மேயர் அன்பழகனிடம் கொடுக்க சொன்னார்.
அதை வாங்கிய மேயர், எதற்காக எனக்கு மட்டும் ஸ்வீட் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, 'என் வார்டு மக்களின் பிரச்னைகளை நீங்கள் தீர்த்து வைக்கவில்லை, எங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தவே, உங்களுக்கு அல்வா தருகிறேன்' என்றார்.
மேயர் அன்பழகன், அந்த ஸ்வீட் பாக்சை திறக்காமல் அப்படியே பக்கத்தில் வைத்துக் கொண்டார்.