/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஜாதியை சொல்லி திட்டிய அ.ம.மு.க., நிர்வாகி கைது
/
ஜாதியை சொல்லி திட்டிய அ.ம.மு.க., நிர்வாகி கைது
ADDED : மே 09, 2024 11:21 PM
திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா, 61; அ.ம.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர். இவருக்கும், புத்தாநத்தத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன், 62, என்ற விவசாயிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக முத்துக்கருப்பன் அளித்த புகாரில், வன்கொடுமை சட்டத்தில் அப்துல்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த, 6ம் தேதி, இடையப்பட்டி பிள்ளையார் கோவில் அருகே, முத்துக்கருப்பன், பெரியசாமி என்பவருடன் நிலம் அளப்பதுதொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே அப்துல்லா வந்தபோது, முத்துக்கருப்பனை மீண்டும் ஜாதி பெயரை சொல்லி திட்டி, ஏற்கனவே கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் வாங்கக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
முத்துக்கருப்பன் புகாரின்படி, புத்தாநத்தம் போலீசார் வன்கொடுமை சட்டத்தில் நேற்று முன்தினம் அப்துல்லாவை கைது செய்தனர்.