/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மணப்பாறை நகராட்சி மீது பா.ஜ., போலீசில் புகார்
/
மணப்பாறை நகராட்சி மீது பா.ஜ., போலீசில் புகார்
ADDED : மார் 01, 2025 02:47 AM

மணப்பாறை: டூ- - வீலர் ஸ்டாண்டில், 6 ரூபாய் கட்டணத்துக்கு, 15 ரூபாய் அடாவடியாக வசூலிப்பதாக பா.ஜ.,வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பஸ் ஸ்டாண்டில் நகராட்சி டூ - வீலர் ஸ்டாண்டில், 12 மணி நேரத்துக்கு, 6 ரூபாய் கட்டணம். ஆனால், ஆறு மாதங்களுக்கு மேலாக, 6 ரூபாய் கட்டணச்சீட்டு வழங்கி, 10 ரூபாய் வசூலித்தனர்.
ஒரு மாதமாக, அதே 6 ரூபாய் கட்டண சீட்டை கொடுத்து, 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த, 15 ரூபாய் கட்டணத்தில், நகராட்சிக்கு, 6 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மீதி, 9 ரூபாய், மணப்பாறை ஆளுங்கட்சி பிரமுகர்கள், நகராட்சி அதிகாரிகள் பங்கு பிரித்துக் கொள்வதாக கூறப்படுகிறது.
அமைச்சர் நேருவின் ஆதரவாளர் இந்த வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக தெரிகிறது. இந்த அடாவடி வசூல் குறித்து மணப்பாறை பா.ஜ., நகர தலைவர் கோபாலகிருஷணன், நகராட்சி நிர்வாகம் மீது மணப்பாறை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.