sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பா.ஜ., - எம்.எல்.ஏ., மகனின் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

பா.ஜ., - எம்.எல்.ஏ., மகனின் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பா.ஜ., - எம்.எல்.ஏ., மகனின் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பா.ஜ., - எம்.எல்.ஏ., மகனின் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : ஆக 30, 2024 02:44 AM

Google News

ADDED : ஆக 30, 2024 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி,:திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில், இந்தியன் பப்ளிக் பள்ளி செயல்படுகிறது.

நேற்று காலை, 7:00 மணிக்கு பள்ளி முதல்வர் ஷீலாவின் இ - மெயில் முகவரிக்கு, பள்ளியில் பைப் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளி முதல்வர் உடனே, ராம்ஜிநகர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் பள்ளியில் இருந்த மாணவர்களை வெளியேற்றினர். மோப்பநாய் பொன்னி, வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுதும் சோதனை நடத்தினர்; வெடிகுண்டுகள் இல்லை. மதியம், 1:30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால், பள்ளிக்கு வெளியேயும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த பள்ளியின் தாளாளர் சிவக்குமார், மொடக்குறிச்சி பா.ஜ., -- எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே உள்ள இந்த பள்ளியின் கிளை, ஈரோடு சேனாதிபதிபாளையம் மற்றும் நாமக்கல்லில் உள்ள, 'தி இந்தியன் பப்ளிக்' பள்ளியிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, இ - மெயிலில் நேற்று காலை தகவல் வந்தது.

உஷாரான பள்ளி நிர்வாகத்தினர், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் வாயிலாக சோதனையிட்டனர்; குண்டு ஏதும் சிக்கவில்லை. தகவல் அனுப்பிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் சில நகரங்களில் உள்ள இப்பள்ளி குழுமத்திற்கு மிரட்டல் வந்ததால் விடுமுறை விடப்பட்டது.






      Dinamalar
      Follow us