/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் பள்ளிக்கு குண்டு மிரட்டல்
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் பள்ளிக்கு குண்டு மிரட்டல்
பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் பள்ளிக்கு குண்டு மிரட்டல்
பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் பள்ளிக்கு குண்டு மிரட்டல்
ADDED : ஆக 30, 2024 06:48 AM

திருச்சி: திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில், 'இந்தியன் பப்ளிக் பள்ளி' செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 250க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை, 7:00 மணியளவில் பள்ளி முதல்வர் ஷீலாவின் இ - மெயில் முகவரிக்கு, பள்ளியில் பைப் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்க இருப்பதாகவும் மிரட்டல் விடுவிக்கப்பட்டது.
பள்ளி முதல்வர் ராம்ஜிநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பள்ளியில் இருந்தவர்களை வெளியேற்றினர். மோப்பநாய் பொன்னி, வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுதும் சோதனை நடத்தினர். வெடிகுண்டு இல்லை.
மதியம், 1:30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதால், பள்ளிக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி தாளாளர் சிவக்குமார், மொடக்குறிச்சி பா.ஜ., -- எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.