/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பஸ்களுக்கு இடையே சிக்கிய கார்: பெண் பலி
/
பஸ்களுக்கு இடையே சிக்கிய கார்: பெண் பலி
ADDED : ஆக 01, 2024 10:37 PM
திருச்சி,:நாமக்கல்லை சேர்ந்த மேகலட்சுமி, 70, மகள் கவிதாவை சிங்கப்பூருக்கு அனுப்புவதற்காக, நேற்று, திருச்சிக்கு காரில் வந்தார். முத்துவேல், 50, காரை ஓட்டியுள்ளார். பிற்பகல், 3:00 மணியளவில், திருச்சி, முக்கொம்பு அணை பகுதியில் வந்த போது, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்லும் அரசு டவுன் பஸ் நின்று கொண்டிருந்தது.
முத்துவேல் பஸ்சை முந்திச் செல்வதற்காக, காரை வேகமாக ஓட்டியுள்ளார். எதிரே வேறு ஒரு கார் வந்ததால், தன் காரை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். அப்போது, கோவையில் இருந்து திருச்சி வந்த அரசு பஸ் கார் மீது வேகமாக மோதியது. இதில், இரண்டு பஸ்களுக்கும் இடையே சிக்கி கார் பலத்த சேதமடைந்தது.
மேகலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்துவேல், கவிதா இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். ஜீயபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.