/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சமாதானமடைந்த வழக்கில் தாக்கப்பட்ட முதியவர் இறப்பு
/
சமாதானமடைந்த வழக்கில் தாக்கப்பட்ட முதியவர் இறப்பு
ADDED : மே 01, 2024 08:37 PM
திருச்சி:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உடையவர்குலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், 77. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் இவர்களின் உறவினரான பிரபு குடும்பத்தாருக்கும் சொத்து தொடர்பான பிரச்னையில் முன்விரோதம் இருந்தது.
இதுதொடர்பாக கடந்த, 24ம் தேதி, பிரபு குடும்பத்தாரால் வெங்கடாச்சலம் தாக்கப்பட்டார்.
தகவலறிந்த மண்ணச்சநல்லுார் போலீசார் சம்பவ இடம் வந்தபோது, இரு தரப்பும் சமாதானம் ஆகிவிட்டதால், புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறி, போலீசாரை திருப்பி அனுப்பி விட்டனர்.
இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த வெங்கடாசலம், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் இறந்தார்.
தகவலறிந்த போலீசார், வெங்கடாசலம் குடும்பத்தாரிடம் புகார் வாங்கி, அவரை தாக்கிய பிரபு மனைவி மாலதி, 40, சரசு, 55, பிரபுவின் 16 வயது மகன் ஆகிய, மூவரிடமும் விசாரிக்கின்றனர்.

