ADDED : ஆக 08, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம், முசிறி அருகே, பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி, 55, அழகேசன், 50. இருவருக்கும் சொந்தமான கிணற்றில் நீர் எடுப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. நேற்று இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அழகேசன், அவரது தந்தை உத்தண்டன் ஆகியோர், பழனிசாமியை அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த பழனிச்சாமி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
முசிறி போலீசார், அழகேசன், உத்தண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர்.