/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சிறுமியருக்கு தொல்லை; அரசு டாக்டருக்கு போக்சோ
/
சிறுமியருக்கு தொல்லை; அரசு டாக்டருக்கு போக்சோ
ADDED : செப் 04, 2024 01:36 AM

திருச்சி : திருச்சி, மேலப்புதுாரில், டி.இ.எல்.சி., என்ற கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர், அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர்.
பள்ளி தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயராணி உள்ளார். இவரது மகன் சாம்சன், 31. டாக்டரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தாய் தலைமை ஆசிரியராக இருப்பதால், பள்ளி விடுதிக்கு அடிக்கடி வந்து செல்லும் சாம்சன், அங்குள்ள சிறுமியருக்கு சிகிச்சை அளிப்பது போல, ஆறு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியர் தங்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.
அவர்கள், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்தனர். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விடுதிக்கு சென்று, ஒவ்வொரு சிறுமியரிடமும் விசாரித்தனர். அப்போது, டாக்டர் சாம்சன், சிறுமியரை ஆறு மாதங்களுக்கு மேல் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது உறுதியானது.
கோட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ், சாம்சனை கைது செய்தனர். கைதான இவர், லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றினார்.