/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
லாரி - ஆம்னி பஸ் மோதல் மூதாட்டி, டிரைவர் பலி
/
லாரி - ஆம்னி பஸ் மோதல் மூதாட்டி, டிரைவர் பலி
ADDED : ஏப் 03, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:சென்னையில் இருந்து கம்பத்துக்கு கிருஷ்ணா டிராவல்ஸ் என்ற ஆம்னி பஸ், 36 பயணியருடன், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.
நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, திருச்சி, பால்பண்ணை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்த போது, முன்னால், தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மீது, பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில், ஆம்னி பஸ் டிரைவர் சந்திரன், பயணி பழனியம்மாள், 61, என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தனர். பத்துக்கும் மேற்பட்ட பயணியர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

