/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
புதிதாக போடப்பட்ட தார் சாலையில் புற்கள் முளைத்ததால் மக்கள் அதிர்ச்சி

ADDED : ஆக 19, 2024 07:01 AM

திருச்சி: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு செல்லும் வழியில், கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 62.49 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தார் சாலை போடப்பட்டது.
பணிகள் முடிந்து, ஒரு வாரத்துக்கு முன் தார்ச்சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், 1 கி.மீ., துாரம் போடப்பட்ட அந்த தார் சாலையின் நடுவிலும், ஓரத்திலும் புற்கள் முளைத்துள்ளன.
தார்ச்சாலை நடுவே புற்கள் முளைத்துள்ளதால், மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பணியை, 'ஏ.கே.இன்பிரா' என்ற நிறுவனம் செய்துள்ளது.
அதவத்துார் கிராம மக்கள் கூறுகையில், 'மிகவும் தரமற்ற முறையில் தார் சாலை போடப்பட்டுள்ளதால் தான், இதுபோன்று சாலையின் நடுவே புற்கள் முளைக்கின்றன. மழை பெய்தால், சாலை முழுதும் வீணாகி விடும். தார் சாலை பணியை கண்காணிக்க அதிகாரிகள் தவறியதால், சாலையில் புற்கள் முளைத்துள்ளன' என்றனர்.
தமிழகம் முழுதும் சாலைப் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது அதை நிரூபிப்பது போல புதிய சாலையின் நடுவே புற்கள் முளைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.