/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மாநகராட்சியுடன் இணைப்பு மறுத்து மக்கள் கறுப்பு கொடி
/
மாநகராட்சியுடன் இணைப்பு மறுத்து மக்கள் கறுப்பு கொடி
மாநகராட்சியுடன் இணைப்பு மறுத்து மக்கள் கறுப்பு கொடி
மாநகராட்சியுடன் இணைப்பு மறுத்து மக்கள் கறுப்பு கொடி
ADDED : ஆக 16, 2024 04:59 AM

திருச்சி : திருச்சி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லுார், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள 27 கிராம ஊராட்சிகளை, திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால், வரி உயர்வதோடு, மக்களின் வாழ்வாதாரமான நுாறு நாள் வேலை திட்டமும் பறிபோகும் என்று கூறி பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சுதந்திர தினமான நேற்று, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அதவத்துார் ஊராட்சி மக்கள் வீடுகள் முன் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், காலை 11:00 மணி முதல், பகல் 1:00 மணி வரை கிராம சபை கூட்டம் நடத்தப்படாமல், அனைவரும் காத்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், 'இந்த விவகாரத்தில் நாங்கள் முடிவு எடுக்க முடியாது,' என்று கூறியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், 'அப்ப நீங்க எதற்காக பேச்சு நடத்த வந்தீர்கள்; உயர் அதிகாரிகளை வரச் சொல்லுங்கள்' எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

