/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
விபசாரத்துக்கு துணைபோன போலீசார், எஸ்.ஐ., இடமாற்றம்
/
விபசாரத்துக்கு துணைபோன போலீசார், எஸ்.ஐ., இடமாற்றம்
விபசாரத்துக்கு துணைபோன போலீசார், எஸ்.ஐ., இடமாற்றம்
விபசாரத்துக்கு துணைபோன போலீசார், எஸ்.ஐ., இடமாற்றம்
ADDED : செப் 13, 2024 02:00 AM
திருச்சி:திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபசாரம் நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சோதனை நடத்திய போலீசார், விபசார புரோக்கர்கள் பிரவீன்குமார், மீனாட்சியை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணைநடத்தினர். விபசார புரோக்கர்களின் வரவு செலவு கணக்கு தொடர்பான டைரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில், முக்கிய கஸ்டமர்கள் பெயர்கள் மற்றும் போலீசாருக்கு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்ட மாமூல் தொகை குறித்து தகவல்கள் இருந்தன. அதுகுறித்து தீவிர விசாரணை நடத்த, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.
விசாரணையில், திருச்சி மாநகர விபசார தடுப்புப்பிரிவு எஸ்.ஐ., கீதா, எஸ்.எஸ்.ஐ., சகாதேவன், ஏட்டுகள் பிரதீப், இன்ஸ்டின் ஆகியோர், புரோக்கர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்து, மாதந்தோறும், மாமூல் பெற்று வந்தது தெரிந்தது.
இதையடுத்து அந்த நால்வரையும் ஆயுதப்படைக்கு மாற்றி, மாநகர போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவிட்டார். சஸ்பெண்ட், கைது போன்ற நடவடிக்கைகள் அடுத்து தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.