ADDED : ஜூன் 02, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம் மருதுார் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் விதிகளை கடைபிடிக்காமல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க லால்குடி உதயகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். நீதிபதிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.