/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பள்ளி வேன்கள் மோதல் 8 மாணவர்கள் காயம்
/
பள்ளி வேன்கள் மோதல் 8 மாணவர்கள் காயம்
ADDED : ஆக 07, 2024 10:02 PM
திருச்சி,:திருச்சி, கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு, வேன்களில் மாணவ, மாணவியர் அழைத்து வரப்படுகின்றனர். நேற்று காலை 8;00 மணிக்கு புதுக்கோட்டை சாலையில், பள்ளி வேன் ஒன்றை நிறுத்தி, மாணவ, மாணவியரை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் அதே பள்ளிக்கு மாணவ, மாணவியரை ஏற்றி வந்த மற்றொரு வேன், முன்னால் நின்று கொண்டிருந்த வேன் மீது திடீரென மோதியது.
இதில், முன்னால் நின்ற வேன் கவிழ்ந்தது. அதில் இருந்த எட்டு மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர், வேன் டிரைவர் கிறிஸ்டோபர், 74, ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து தொடர்பாக, திருச்சி மாநகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.