/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மணல் கடத்தியதாக 4 லாரிகள் சிறை அமைச்சர்களின் ஆதரவாளர்கள் 'குஸ்தி'
/
மணல் கடத்தியதாக 4 லாரிகள் சிறை அமைச்சர்களின் ஆதரவாளர்கள் 'குஸ்தி'
மணல் கடத்தியதாக 4 லாரிகள் சிறை அமைச்சர்களின் ஆதரவாளர்கள் 'குஸ்தி'
மணல் கடத்தியதாக 4 லாரிகள் சிறை அமைச்சர்களின் ஆதரவாளர்கள் 'குஸ்தி'
ADDED : மார் 08, 2025 01:16 AM

திருச்சி:திருச்சி அருகே கிராவல் மண் கடத்தியதாக, பொதுமக்கள் சிறைபிடித்த நான்கு லாரிகளை, தி.மு.க., நிர்வாகி, போலீசார் முன்னிலையில் மிரட்டி மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்த பொன்னம்பலப்பட்டி டோல்பிளாசா அருகே, நேற்று காலை கிராவல் மண் ஏற்றி வந்த, நான்கு லாரிகளை, உரிய அனுமதியில்லை என்று கூறி, அப்பகுதி மக்களும், தி.மு.க.,வினரும் சிறை பிடித்தனர்.
இந்த லாரிகள், ஏற்கனவே பலமுறை மணல் கடத்தல் பிரச்னையில் சிக்கியுள்ள, மணப்பாறை கிழக்கு ஒன்றிய செயலர் ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமானது. தகவலறிந்து டோல்பிளாசாவுக்கு வந்த ஆரோக்கியம், அவரது ஆதரவாளர்கள், சிறைபிடித்தவர்களை அடிக்க பாய்ந்தனர். அங்கிருந்த போலீசார் தடுத்தபோதும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆரோக்கியம், கருணாநிதி என்பவரை தரக்குறைவாக திட்டி தாக்கினார்.
பின், லாரிகளை கிளம்பி போக சொன்னார். இந்த பிரச்னையால், பொன்னப்பலப்பட்டி டோல்பிளாசா ஒரு மணிநேரம் போர்க்களமாக காட்சி அளித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
லாரிகளை சிறைபிடித்தவர்கள், வையம்பட்டி தி.மு.க., ஒன்றிய செயலர் ராஜேந்திரன் ஆதரவாளர்கள். இவருக்கும், ஆரோக்கியத்துக்கும் மண் எடுப்பதில் ஏற்கனவே பிரச்னை இருந்து வருகிறது. வையம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இருதரப்புக்கும் பஞ்சாயத்து நடந்தது. கட்சி பெயர் பாதிக்கும் என்பதால், இருதரப்பும் சமாதானம் அடைந்தது.
இதில், ஆரோக்கியம் அமைச்சர் நேருவின் ஆதரவாளர். ராஜேந்திரன் அமைச்சர் மகேஷின் ஆதரவாளர். ஏற்கனவே மணல் கடத்திய லாரிகளை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போலீசாரை எதிர்த்து மீட்டு வந்த வழக்கில், டி.எஸ்.பி.,யை மிரட்டிய வழக்கில் ஆரோக்கியம் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.