/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
டி - 20 கிரிக்கெட் போட்டியில் அணி உரிமையாளர் மோதல்
/
டி - 20 கிரிக்கெட் போட்டியில் அணி உரிமையாளர் மோதல்
டி - 20 கிரிக்கெட் போட்டியில் அணி உரிமையாளர் மோதல்
டி - 20 கிரிக்கெட் போட்டியில் அணி உரிமையாளர் மோதல்
ADDED : ஆக 04, 2024 09:16 PM
திருச்சி:திருச்சி கே.எம்.சி., என்ற தனியார் மருத்துவமனை சார்பில் டி - 20 கிரிக்கெட் போட்டி நடந்தது. ஜெ.ஜெ., கல்லுாரி மற்றும் சாரநாதன் கல்லுாரியில் நடந்த போட்டியின் இறுதியாட்டம், பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் கல்லுாரியில் நடந்தது.
போட்டியில் பங்கேற்கும் ஆக்சினா மற்றும் மெட்லைன் இன்டஸ்ட்ரீஸ் அணிகளின் வீரர்கள் மைதானத்துக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த ஆக்சினா அணி உரிமையாளர் ஜெயகர்ணா மற்றும் மெட்லைன் அணி உரிமையாளர் வீரமணி ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டு, இரு அணி வீரர்களும் கை கலப்பில் ஈடுபட்டனர்.
இதனால் மைதானமே களேபரம் ஆனது. அங்கிருந்த ரோந்து போலீசார் அவர்களை விலக்கி விட்டனர். இதனால் போட்டி கைவிடப்பட்டது. இதுகுறித்து வீரமணி தரப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.