ADDED : மே 11, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் பரணிகுமார், 28. இவர் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த இவர், மார்ச் மாதம் வெளியே வந்தார்.
ஏற்கனவே திருமணமாகி, ஒரு மகனுக்கு தாயான ஜோதி, 45, என்பவருடன் பரணிகுமார் வாழ்ந்தார். நேற்று முன்தினம் இரவு, திருச்சி பஜார் பகுதியில், ஜோதியிடம் தகராறு செய்த பரணிகுமார், ஜோதியை தாக்கி உள்ளார்.
அதை கண்டு ஆத்திரமடைந்த ஜோதியின் மகன் மாதேஷ், 21, மற்றும் அவரது நண்பன் முகமது தவுபீக், 23, ஆகியோர் சேர்ந்து, பரணிகுமாரை கத்தியால் குத்திவிட்டு, தப்பி ஓடி விட்டனர். படுகாயமடைந்த பரணி குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். கோட்டை போலீசார், கொலையாளிகளை தேடுகின்றனர்.