/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
போலி ஆவணங்கள் கொடுத்த மூவர் ஏர்போர்ட்டில் கைது
/
போலி ஆவணங்கள் கொடுத்த மூவர் ஏர்போர்ட்டில் கைது
ADDED : ஜூன் 14, 2024 02:34 AM
திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம், மலேஷியா செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணியரின் பாஸ்போர்ட்களை, விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, பெரம்பலுார் மாவட்டம் லாடபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர், 46, என்பவர், போலி ஆவணங்கள் வாயிலாக பாஸ்போர்ட் எடுத்தது தெரிய வந்தது. அவரை விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அதுபோல, நேற்று முன்தினம் நள்ளிரவு மலேஷியாவில் இருந்து திருச்சி வந்த, 'ஏர் ஏசியா' விமானத்தில் வந்த பயணியரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, பெரம்பலுாரைச் சேர்ந்த மதுரை வீரன், 48, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சீனிபாஷா, 63, ஆகியோர், பிறந்த தேதி, தந்தை பெயர் ஆகியவற்றை மாற்றி, போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்தது தெரிந்தது,
மூவரையும் விமான நிலைய போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.