/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஆன்லைனில் உணவு பொருள் 'ஆர்டர்' தவிர்க்க திருச்சி கலெக்டர் அறிவுரை
/
ஆன்லைனில் உணவு பொருள் 'ஆர்டர்' தவிர்க்க திருச்சி கலெக்டர் அறிவுரை
ஆன்லைனில் உணவு பொருள் 'ஆர்டர்' தவிர்க்க திருச்சி கலெக்டர் அறிவுரை
ஆன்லைனில் உணவு பொருள் 'ஆர்டர்' தவிர்க்க திருச்சி கலெக்டர் அறிவுரை
ADDED : செப் 05, 2024 01:41 AM
திருச்சி:''ஆன்லைனில் உணவு பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்,'' என, திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் கூறினார்.
செய்தியாளர்களிடம் திருச்சி கலெக்டர் கூறியதாவது:
பாலியல் புகார்கள் அடிப்படையில், ஒரு பள்ளியின் பள்ளி தலைமை ஆசிரியர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மகன் செயலை தடுக்காத தலைமை ஆசிரியரின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும், 'இன்டெர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி' அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தில் தவறு நடைபெறும் பட்சத்தில், அந்த கமிட்டியிடம் புகார் தெரிவிக்கலாம். பெண்கள் உட்பட 10 பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில் இந்த குழுவை அமைக்க வேண்டும்.
நுாடுல்ஸ் போன்ற உணவு பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் உள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடும் போது, அது எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது தெரியாது. அதன் தரம் போன்றவை சைனீஸ், கொரியா போன்ற மொழிகளில் இருப்பதால், தரத்தை தெரிந்து கொள்ள முடிவதில்லை.
எனவே, ஆன்லைனில் நுாடுல்ஸ் பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த பொருட்கள் ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் பற்றிய புகார்கள் வந்தால், அங்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.