/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி என்.ஐ.டி., விடுதி காப்பாளர் திடீர் ராஜினாமா
/
திருச்சி என்.ஐ.டி., விடுதி காப்பாளர் திடீர் ராஜினாமா
திருச்சி என்.ஐ.டி., விடுதி காப்பாளர் திடீர் ராஜினாமா
திருச்சி என்.ஐ.டி., விடுதி காப்பாளர் திடீர் ராஜினாமா
ADDED : செப் 01, 2024 01:57 AM
திருச்சி: திருச்சி, என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில், ஆக., 29 காலை விடுதி அறைக்குள் இருந்த மாணவி ஒருவரிடம், ஒப்பந்த ஊழியர் கதிரேசன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், மாணவி அணிந்திருந்த ஆடை குறித்து தவறாகப் பேசியதாக, விடுதி காப்பாளரைக் கண்டித்து என்.ஐ.டி., மாணவர்கள், 12 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், விடுதி காப்பாளர் பேபி, மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
மாணவ - மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டதால், திருச்சி எஸ்.பி., வருண்குமார், விடுதி காப்பாளர் மாற்றப்படுவார் என, தெரிவித்திருந்தார். என்.ஐ.டி., இயக்குனர் அகிலாவிடம் இது தொடர்பாக பரிந்துரையும் செய்திருந்தார்.
இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், விடுதி காப்பாளர் பொறுப்பில் இருந்து பேபி ராஜினாமா செய்துள்ளார். மற்ற இரண்டு விடுதி காப்பாளர்களான சபிதா பேகம், மகேஸ்வரி ஆகியோரும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.