/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி எஸ்.பி., விவகாரம் மேலும் இருவர் சிக்கினர்
/
திருச்சி எஸ்.பி., விவகாரம் மேலும் இருவர் சிக்கினர்
திருச்சி எஸ்.பி., விவகாரம் மேலும் இருவர் சிக்கினர்
திருச்சி எஸ்.பி., விவகாரம் மேலும் இருவர் சிக்கினர்
ADDED : ஆக 26, 2024 04:42 AM
திருச்சி: திருச்சி எஸ்.பி., வருண்குமாருக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக, நாம் தமிழர் கட்சியினர், எஸ்.பி., பற்றியும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பற்றியும் சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பி வருகின்றனர்.
எஸ்.பி., அளித்த புகாரின்படி, சைபர் கிரைம் போலீசார், 51 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவிர, எஸ்.பி., பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்திருந்த சிறுவனை நேரில் அழைத்து, அறிவுரை கூறி அனுப்பினர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சண்முகம், அப்துல் ரகுமான் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவதுாறு பிரச்னையால், எஸ்.பி., வருண்குமாரும், அவரது மனைவியும் எக்ஸ் வலைதளத்தில் இருந்து தற்காலிமாக விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்துள்ளனர்.