/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஏர்போர்ட்டில் ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்
/
ஏர்போர்ட்டில் ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்
ADDED : அக் 31, 2024 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, சிங்கப்பூர் மற்றும் மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானங்களில், பயணியரிடம் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில், நான்கு பயணியர், 1,488 கிராம் தங்க நகைகளை, மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு, 1.16 கோடி ரூபாய். நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், நான்கு பேரிடமும் விசாரணை நடத்துகின்றனர்.