/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தி.மு.க., சேர்மனை கண்டித்து 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
தி.மு.க., சேர்மனை கண்டித்து 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தி.மு.க., சேர்மனை கண்டித்து 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தி.மு.க., சேர்மனை கண்டித்து 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : பிப் 01, 2024 01:59 AM

திருச்சி:திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே பொன்னம்பட்டி டவுன் பஞ்.,சில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு சேர்மனாக தி.மு.க.,வைச் சேர்ந்த சரண்யா உள்ளார்.
டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், பல கட்சிகளை சேர்ந்த 13 பேர், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனால் சேர்மன் சரண்யா மற்றும் 12வது வார்டு கவுன்சிலர் வேல்மணி ஆகியோர் மட்டும் கூட்டத்தில், அதிகாரிகளுடன் உட்கார்ந்து இருந்தனர்.
வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் கூறுகையில், 'டவுன் பஞ்., வளர்ச்சிப்பணிகளை, சேர்மன் தன் உறவினர்கள் மூலம் கான்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார். அவர் வார்டுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறார்.
'மற்ற வார்டுகளில் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. இதனால் தொடர்ந்து கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்து வருகிறோம்' என்றனர்.
இதுபோல, லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி டவுன் பஞ்., கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், தி.மு.க., சேர்மன் ஆலீசைக் கண்டித்து, 5 தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.