/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ம.தி.மு.க., நா.த.க., மோதல் சீமானுடன் 19 பேர் விடுதலை
/
ம.தி.மு.க., நா.த.க., மோதல் சீமானுடன் 19 பேர் விடுதலை
ம.தி.மு.க., நா.த.க., மோதல் சீமானுடன் 19 பேர் விடுதலை
ம.தி.மு.க., நா.த.க., மோதல் சீமானுடன் 19 பேர் விடுதலை
ADDED : ஜூலை 20, 2025 02:56 AM
திருச்சி:திருச்சியில் ம.தி.மு.க., - நா.த.க.,வினர் மோதல் வழக்கில், சீமான் உட்பட 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில், 2018 மே 19-ம் தேதி ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வருகையின் போது, விமான நிலையத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினருக்கும், ம.தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் கொடிக்கம்பங்களால் தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பினர் மோதலால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக, இரு தரப்பினர் மீதும் விமான நிலைய போலீசார் வழக்கு பதிந்தனர். திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணை நடந்தது.
இதில், நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட இரு தரப்பை சேர்ந்த 19 பேரை விடுவித்து, நீதிபதி கோபிநாத் நேற்று உத்தரவிட்டார்.