நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் சாரநாதன், 23. இவரது நண்பர் கோகுல்நாத், 22. கல்லுாரி படிப்பை முடித்த இருவரும், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஸ்ரீரங்கத்தில் இருந்து, 'ராயல் என்பீல்ட் புல்லட்' பைக்கில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்ல புறப்பட்டனர்.
காவிரியாற்று பாலத்தில், பைக் சென்றபோது, எதிரே வந்த, 'மாருதி ஸ்விப்ட்' கார், பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பைக்கில் வந்த நண்பர்கள் இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, கார் ஓட்டி வந்த, தில்லை நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.