ADDED : மே 15, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி, சோமரசம்பேட்டையில், எம்.ஜி.ஆர்., சிலை அருகே நேற்று அதிகாலையில், ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது.
இதில், தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதால், எட்டு பெட்டி கடைகளும் எரிந்து பொருட்கள் சேதமாகின. தகவல் அறிந்த திருச்சி தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.