/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி பேக்கரிகளில் தில்லுமுல்லு 8,000 அழுகிய முட்டை பறிமுதல்
/
திருச்சி பேக்கரிகளில் தில்லுமுல்லு 8,000 அழுகிய முட்டை பறிமுதல்
திருச்சி பேக்கரிகளில் தில்லுமுல்லு 8,000 அழுகிய முட்டை பறிமுதல்
திருச்சி பேக்கரிகளில் தில்லுமுல்லு 8,000 அழுகிய முட்டை பறிமுதல்
ADDED : அக் 19, 2024 09:19 PM

திருச்சி,:திருச்சி, தென்னுார், ஆழ்வார் தோப்பு பகுதியில் உள்ள பேக்கரிகளில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அதில், அசாரூதின், கருணாகரன் ஆகியோருக்கு சொந்தமான இரு பேக்கரிகளில், நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து, கேக் மற்றும் பிரட்டுகள் தயார் செய்வதற்கு பயன்படுத்தியது சோதனையில் தெரிய வந்தது.
அந்த பேக்கரிகளில் இருந்து, 8,000 அழுகிய முட்டைகள், கெட்டுப்போன முட்டைகளில் தயார் செய்த, 215 கிலோ பேக்கரி உணவு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும், பேக்கரி உரிமையாளர்கள் பெற்றிருந்த உணவு பாதுகாப்பு உரிமமும் ரத்து செய்யப்பட்டு, இரண்டு பேக்கரி தயாரிப்பு நிறுவனத்திலும், தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.
இரு பேக்கரிகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.