/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கரு கலைக்கப்பட்ட மாணவி பலி காதலன் உட்பட மூவர் மீது வழக்கு
/
கரு கலைக்கப்பட்ட மாணவி பலி காதலன் உட்பட மூவர் மீது வழக்கு
கரு கலைக்கப்பட்ட மாணவி பலி காதலன் உட்பட மூவர் மீது வழக்கு
கரு கலைக்கப்பட்ட மாணவி பலி காதலன் உட்பட மூவர் மீது வழக்கு
ADDED : மார் 01, 2024 07:55 PM
திருச்சி:திண்டுக்கல் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த 17 வயது பெண், காந்தி கிராமத்தில் உள்ள கல்லுாரி விடுதியில் தங்கி, நோயாளிகள் பராமரிப்பு குறித்த சான்றிதழ் படிப்பு படித்து வந்தார்.
மாணவியின் பெற்றோர் இறந்து விட்டதால், அவர் திண்டுக்கலில் பாட்டி பராமரிப்பில் இருந்தார். சில நாட்களுக்கு முன், மாணவியை பார்க்க, திருச்சியில் வசிக்கும் அவரது அத்தை மீனாட்சி சென்றார்.
மாணவியின் உடலில் இருந்த மாற்றத்தைக் கண்ட அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. காந்திகிராமம் அருகே உள்ள சின்னாளப்பட்டியில், காப்பகத்தில் பணியாற்றும் ராம்குமார், 25, என்பவரை காதலிப்பதாகவும், அவரால் கர்ப்பமானதாகவும் கூறினார்.
அதிர்ச்சி அடைந்த அத்தை, கர்ப்பத்தை கலைக்க மாணவியை திருச்சி அழைத்து வந்தார். உறையூரில் உள்ள சுதர்சனா மருத்துவமனையில் கருக்கலைப்பு நடந்தது.
மாணவிக்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததால், திருச்சி அரசு மருத்துவமனைக்கு தனியார் டாக்டர் அனுப்பினார். அங்கு, சிகிச்சை பலனின்றி, இரு நாட்களுக்கு முன் மாணவி இறந்து விட்டார்.
இதையடுத்து, மாணவியின் காதலன் ராம்குமார், அத்தை மீனாட்சி, கருக்கலைப்பு செய்த டாக்டர் ஆகிய மூவர் மீதும், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

