/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிய போதை ஆசாமி கயிறு கட்டி மீட்பு
/
கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிய போதை ஆசாமி கயிறு கட்டி மீட்பு
கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிய போதை ஆசாமி கயிறு கட்டி மீட்பு
கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிய போதை ஆசாமி கயிறு கட்டி மீட்பு
ADDED : ஆக 01, 2024 11:11 PM

திருச்சி:காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நேற்று முன்தினம், திருச்சி, முக்கொம்பு அணையில் இருந்து, 60,000 கன அடிக்கும் அதிகமான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், ஆறு முழுதும் இரு கரைகளை தொட்டு, தண்ணீர் பெருக்கெடுத்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை குறுக்கே உள்ள கொள்ளிடம் ஆற்று பாலத்தின் தாங்கு துாண் சிமென்ட் கட்டையில் நின்று ஒருவர் அலறிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள், ஸ்ரீரங்கம் தீயணைப்பு ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் அங்கு விரைந்து, வெள்ளத்தின் நடுவே சிக்கி தவித்தவரை, பழைய மற்றும் புதிய பாலத்திற்கு நடுவே கயிறு கட்டி, ஆற்றுக்குள் இறங்கி அவரை பத்திரமாக மீட்டனர்.
விசாரித்த போது, திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த சசிகுமார், 60, என்பதும், நேற்று முன்தினம் அப்பகுதியில் கட்டட வேலைக்கு வந்தவர், ஆற்று பாலத்தின் தாங்கு துாண் சிமென்ட் கட்டையில் மது போதையில், 'மட்டையாகி' படுத்ததும் தெரிந்தது.
அப்போது நீரோட்டம் இல்லாத ஆற்றில், அவர் போதை தெளிந்து பார்த்த போது, வெள்ளம் பெருக்கெடுத்ததை கண்டு திடுக்கிட்டு, அலறியது தெரியவந்தது. தீயணைப்பு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து, தப்பித்தோம், பிழைத்தோம் என சசிகுமார் ஓட்டம் பிடித்தார்.