/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பால் வாங்கி வந்த விவகாரம் வாலிபர் உயிரை பறித்தது
/
பால் வாங்கி வந்த விவகாரம் வாலிபர் உயிரை பறித்தது
ADDED : ஜன 31, 2025 02:22 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மூரம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா, 26, விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, நான்கு பெண் குழந்தைகள், ஆண் குழந்தை உள்ளனர்.
இரு வாரங்களுக்கு முன், மனைவி இவரிடம் பால் வாங்க சொல்லியுள்ளார். இவர், பாக்கெட் பால் வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, கருப்பையாவுக்கும், மனைவிக்கும் சண்டை ஏற்பட்டது. விரக்தியடைந்த கருப்பையா, 16ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தார் அவரை காப்பாற்றி, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புத்தாநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

