/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மீட்கப்பட்ட பெண் மீது குவிந்த புகார்கள் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்
/
மீட்கப்பட்ட பெண் மீது குவிந்த புகார்கள் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்
மீட்கப்பட்ட பெண் மீது குவிந்த புகார்கள் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்
மீட்கப்பட்ட பெண் மீது குவிந்த புகார்கள் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்
ADDED : பிப் 17, 2024 02:04 AM
திருச்சி:திருச்சி, பால் பண்ணை பகுதியில் உள்ள ராஜாளி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சீதா, 52, ஆடிட்டர். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த குறும்பட நடிகர் மதியழகன் என்பவரின் மனைவி மாலதி, 44, என்பவர் பக்கத்து வீடு என்ற முறையில் பழகினார்.
அந்த பழக்கத்தில், 'ஆன்லைன் வர்த்தகம் செய்தால், அதிக லாபம் கிடைக்கும்' என சீதாவிடம், மாலதி கூறினார்.
இதை நம்பிய சீதா, பல தவணைகளாக, 1.88 கோடி ரூபாயை மாலதியிடம் கொடுத்து, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய சொன்னார். ஆனால் கூறியபடி, மாலதி பணத்தை முதலீடு செய்யவில்லை; திருப்பியும் தரவில்லை.
இந்நிலையில் தான், திருச்சி மாவட்ட பா.ஜ., பெண் நிர்வாகி ஒருவர், பணத்துக்காக அந்த பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது. அந்த பெண் நிர்வாகி வீட்டில் இருந்து, மாலதி அண்மையில் போலீசாரால் மீட்கப்பட்டார்.
ஆனால் போலீசாரின் விசாரணையில், மாலதி பலரிடம் பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. தன்னிடமும், 1.88 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக மாலதி மீது சீதா, மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு மாலதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மாலதி மகன் நடராஜன், 30, அவரது உறவினர் ஜெயக்குமார் ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.