/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
அமேசான் நிறுவனத்திற்கு ரூ.35,000 அபராதம்
/
அமேசான் நிறுவனத்திற்கு ரூ.35,000 அபராதம்
ADDED : டிச 03, 2025 09:23 AM
திருச்சி: 'மினி புரொஜெக்டர்' ஆர்டர் செய்தவருக்கு, டி - சர்ட் அனுப்பிய சேவை குறைபாடால், அமேசான் நிறுவனத்துக்கு, 35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி, இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் ஐசக் நியூட்டன். இவர், ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில், 2,699 ரூபாய்க்கு 'மினி புரொஜெக்டர்' ஆர்டர் செய்தார். ஆனால், அவருக்கு அந்நிறுவனம் டி - சர்ட் அனுப்பியது. இந்த சேவை குறைபாடு குறித்து, நுகர்வோர் நீதிமன்றத்தில், 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு, அவர் வழக்கு தொடர்ந்தார்.
திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் சேகர் விசாரித்து, சேவை குறைபாடு ஏற்படுத்திய அமேசான் நிறுவனம், அதன் டெலிவிரி ஏஜென்ட், விற்பனையாளர் ஆகிய மூவருக்கும், 25,000 ரூபாய் அபராதம், 10,000 ரூபாய் வழக்கு செலவுத்தொகை என, மொத்தம், 35,000 ரூபாய் நுகர்வோருக்கு வழங்க உத்தரவிட்டார்.

