/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
வீணாக செலவழித்து சுற்றிய மகனை தாயே எரித்து கொன்றது அம்பலம்
/
வீணாக செலவழித்து சுற்றிய மகனை தாயே எரித்து கொன்றது அம்பலம்
வீணாக செலவழித்து சுற்றிய மகனை தாயே எரித்து கொன்றது அம்பலம்
வீணாக செலவழித்து சுற்றிய மகனை தாயே எரித்து கொன்றது அம்பலம்
ADDED : ஏப் 23, 2025 03:12 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேலம்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி, 45. இவர்களுக்கு கவுசி என்ற மகளும், கோபிநாத், 26, என்ற மகனும் இருந்தனர். பாலசுப்பிரமணி, நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இதனால் தாய் செல்வியுடன், வேலம்பட்டியில் தோட்டத்து வீட்டில் தங்கி, தங்களின் 5 ஏக்கர் நிலத்தில் கோபிநாத் விவசாயம் பார்த்தார்.
கவுசி சென்னையில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, தோட்டத்து வீட்டின் வெளியே, கோபிநாத், கட்டிலோடு எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தா.பேட்டை போலீசார், செல்வியிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் தன் மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனால், போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
கோபிநாத், சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டை, 18 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி, 9 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கி, அதை சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
இதை தாய் செல்வி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக தாய் - மகன் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் சண்டை நடந்து, பின் துாங்கி விட்டனர். மகன் மீது ஆத்திரத்தில் இருந்த செல்வி, நள்ளிரவில் கோடாரியால் கட்டிலில் துாங்கிய மகனை வெட்டி கொன்று விட்டு, பின் கட்டிலோடு சேர்த்து எரித்து விட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

