/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி ஐ.ஐ.எம்.,மில் படித்த அசாம் மாணவி தற்கொலை
/
திருச்சி ஐ.ஐ.எம்.,மில் படித்த அசாம் மாணவி தற்கொலை
ADDED : மே 24, 2025 08:22 PM
திருச்சி:திருச்சி ஐ.ஐ.எம்.,மில் பிஎச்.டி., படித்த மாணவி, தன் தந்தையின் சகோதரர்கள் அடுத்தடுத்து இறந்த சோகத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே இந்திய மேலாண்மை கழகம் எனப்படும் ஐ.ஐ.எம்., செயல்படுகிறது. அங்கு, அசாம் மாநிலம், சிப்சாகர் லுதுாரி சிட்டியாகான் பகுதியை சேர்ந்த, சிபானி கோகை, 27, இரண்டு ஆண்டுகளாக பிஎச்.டி., படித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன், இவரது தந்தையின் சகோதரர்கள் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான சிபானி கோகை, தேர்வுகளில் குறைவாக மதிப்பெண்கள் பெற்று, விரக்தியில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் மதியம், அவர் சாப்பிட வரவில்லை என்பதால், சக மாணவியர் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு, சிபானி கோகை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. நவல்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.