/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் டாக்டர் மீது சரமாரி தாக்குதல்
/
திருச்சி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் டாக்டர் மீது சரமாரி தாக்குதல்
திருச்சி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் டாக்டர் மீது சரமாரி தாக்குதல்
திருச்சி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் டாக்டர் மீது சரமாரி தாக்குதல்
ADDED : நவ 06, 2024 02:00 AM

திருச்சி:திருச்சி, மிளகு பாறை பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை டாக்டராக பணிபுரிபவர் கார்த்திகேயன்.
இவர், நேற்று பகல், 12:30 மணியளவில் காரில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, கருமண்டபம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் பிரவீன், 45, ஓட்டி வந்த கார், டாக்டர் காருடன் எதிர்பாராமல் மோதியுள்ளது.
டாக்டர் கார்த்திகேயன், மற்றொரு காரில் மனைவியுடன் இருந்த ஹோட்டல் உரிமையாளர் பிரவீனை தரக்குறைவாக பேசிவிட்டு, மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
மனைவி முன்னிலையில், தரக்குறைவாக பேசிய டாக்டர் மீது ஆத்திரமடைந்த பிரவீன், பகல், 12:50 மணிக்கு, ஆதரவாளர்கள் சிலருடன் மருத்துவமனைக்கு சென்று, டாக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றியதில், டாக்டர் மற்றும் மருத்துவமனை பணியாளர்களுடன் பிரவீனும், அவருடன் சென்றவர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். அங்கு இருந்தவர்கள், அவர்களை சமாதானப்படுத்தினர்.
தகவலறிந்த கண்டோன்மெண்ட் போலீசார், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். இதனால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
கைகலப்பில் காயமடைந்ததாக டாக்டர் கார்த்திகேயன், அரசு மருத்துவமனையிலும், பிரவீன் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.