/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
காவிரி கரையில் பறவைகள் பூங்கா; துணை முதல்வர் திறந்து வைத்தார்
/
காவிரி கரையில் பறவைகள் பூங்கா; துணை முதல்வர் திறந்து வைத்தார்
காவிரி கரையில் பறவைகள் பூங்கா; துணை முதல்வர் திறந்து வைத்தார்
காவிரி கரையில் பறவைகள் பூங்கா; துணை முதல்வர் திறந்து வைத்தார்
ADDED : பிப் 10, 2025 12:20 AM

திருச்சி; திருச்சியில், 18.63 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட பறவைகள் பூங்காவை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
திருச்சி, கம்பரசம்பேட்டை அருகே, அய்யாளம்மன் படித்துறை பகுதியில், ஊரக வளர்ச்சி துறை சார்பில், நமக்கு நாமே திட்டத்தில், 18.63 கோடி ரூபாய் செலவில், பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி கரையோரத்தில், 4.2 ஏக்கரில் அமைந்த இந்த பூங்காவில், 40 வகையான பறவைகள், 40 வகையான மீன் இனங்கள் மற்றும் சில வளர்ப்பு பிராணிகள் உள்ளன. பூங்காவுக்கு வரும் மக்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில், அமேசான் கிளிகள், தீக்கோழிகள் மற்றும் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகளும் உள்ளன.
தமிழக மக்களின் வாழ்வியல் நிலங்களாக கூறப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து வகையான நிலங்கள், அதற்கான கருப்பொருட்களுடன், 60,000 சதுரடியில் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பறவைகள் இனப்பெருக்கத்திற்கு தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது.
செயற்கை நீர்வீழ்ச்சிகள், குளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பெரியவர்களுக்கு, 200 ரூபாய், சிறுவர்களுக்கு, 150 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய இந்த பறவைகள் பூங்காவை, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.
பூங்காவில் உள்ள பறவைகளை பார்வையிட்டு, உணவளித்த அவர், பறவைகளை கையில் பிடித்தவாறு, 'செல்பி' எடுத்துக் கொண்டார்.