/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மனைவி கொலை வழக்கில் சிக்கிய பா.ஜ., பிரமுகர் மீது மோசடி புகார்
/
மனைவி கொலை வழக்கில் சிக்கிய பா.ஜ., பிரமுகர் மீது மோசடி புகார்
மனைவி கொலை வழக்கில் சிக்கிய பா.ஜ., பிரமுகர் மீது மோசடி புகார்
மனைவி கொலை வழக்கில் சிக்கிய பா.ஜ., பிரமுகர் மீது மோசடி புகார்
ADDED : மே 08, 2025 01:51 AM
திருச்சி:மனைவியை கொலை செய்த வழக்கில் சிக்கிய பா.ஜ., பிரமுகர் மீது, வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி, 2 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, கூலித்தொழிலாளி புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள லிங்கம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மதியழகன், 30. இவர், 2023ல் வெளிநாட்டு வேலைக்கு செல்ல, மதுரை, மேலுாரில் பாலா டிராவல்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வந்த, பா.ஜ., மாநில பொருளாதார பிரிவு செயலர் பாலனை அணுகினார்.
அவரும், மதியழகனை போலந்து நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி, 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை வாங்கினார். ஆனால், ஓராண்டு ஆகியும் அனுப்பவில்லை.
இதுகுறித்து, அவர் மேலுார் மற்றும் துவரங்குறிச்சி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், மனைவி சரண்யா கொலை வழக்கில் பாலன் கைது செய்யப்பட்டதை பார்த்த மதியழகன், துவரங்குறிச்சி போலீசில் நேற்று புகார் அளித்தார்.
அதில், வெளிநாடு அனுப்புவதாக மோசடி செய்த, 2 லட்சம் ரூபாய் மற்றும் பாஸ்போர்ட்டை பெற்றுத்தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.