/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
திருச்சி ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 14, 2024 04:27 AM
திருச்சி: திருச்சியில் சில நாட்களுக்கு முன், ஒன்பது பள்ளிகளுக்கும், இரண்டு கல்லுாரிகளுக்கும் 'இ--மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. போலீசாரின் தீவிர சோதனைக்குப் பின், அது புரளி என தெரிய வந்தது.
நேற்று, திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பிரீஸ் ஹோட்டல், திலகவதி, கண்ணப்பா, கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள கோர்ட் யார்ட் போன்ற பிரபல ஹோட்டல்களுக்கு இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
தகவலறிந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு சென்று, அறைகள், வாகன நிறுத்துமிடம் போன்ற பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். எந்த ஹோட்டலிலும் வெடிபொருட்கள் எதுவும் இல்லாததால், புரளி எனத் தெரியவந்தது.
திருச்சி மாநகர போலீசார், 'சைபர் கிரைம்' போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.