/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
25 பயணியரை காப்பாற்றி உயிரை விட்ட பஸ் டிரைவர்
/
25 பயணியரை காப்பாற்றி உயிரை விட்ட பஸ் டிரைவர்
ADDED : ஏப் 17, 2025 02:11 AM
சமயபுரம்:பணியின் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தி, பயணியரை காப்பாற்றி உயிரிழந்த அரசு பஸ் டிரைவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை, திருமங்கலத்தை சேர்ந்தவர் ரவீந்திரன், 35; மதுரையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம், மதுரையில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் 25க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.
அதிகாலை, 2:30 மணிக்கு திருச்சி, சமயபுரம் அருகே சென்ற போது, ரவீந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சுதாரித்த அவர், பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தி, பின் மயங்கியுள்ளார்.
கண்டக்டர் மணிகண்டன், பயணியர் உதவியுடன் அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் ரவீந்திரனை சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பயணியர் உயிரை காப்பாற்றி, உயிரிழந்த டிரைவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.