/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பள்ளி சூறை; 116 பேர் மீது வழக்கு
/
பள்ளி சூறை; 116 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 13, 2025 11:37 PM
திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறையில் குரு சி.பி.எஸ்.இ., பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவிக்கு, பள்ளி தாளாளரின் கணவர் வசந்த், 52, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, பிப்., 6ல் பள்ளியில் நின்ற வசந்த் காரை, சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.
பின், பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான, குரு மெட்ரிக்., பள்ளியில் நுழைந்து, அங்கிருந்த காரை சேதப்படுத்தி, பள்ளி கட்டடத்தின் கண்ணாடிகள், ஜன்னல்கள், சேர்கள், முதல்வர் அறை ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.
தடுக்க வந்த வாட்ச்மேன் நைனிமுத்து, 58, என்பவரும் தாக்கப்பட்டார். பள்ளி துணை முதல்வர் நாகராஜன், 38, மணப்பாறை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து, சிறுமியின் உறவினர்கள் உட்பட அடையாளம் தெரிந்த 16 பேர், அடையாளம் தெரியாத 100 பேர் என, 116 பேர் மீது வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

