ADDED : ஜூலை 15, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், அரசன்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், கார்த்திக், 13, சுஜன், 13, ஆகிய இருவரும், 9ம் வகுப்பு படிக்கின்றனர்.
நேற்று முன்தினம், பள்ளி வளாகத்தில் கிடந்த ஜல்லி கற்களை அள்ளி கொட்டும் வேலையில், மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். கார்த்திக், சுஜன் என்ற மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சுஜன், கையில் வைத்திருந்த மண்வெட்டியால், கார்த்திக்கின் தலையில் தாக்கினான்.
இதில், பலத்த காயமடைந்த கார்த்தி க்கை, பள்ளி ஆசிரியர்கள் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
