/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
'அறையை மீட்டு கொடுங்கள்' மாவட்ட நீதிபதியிடம் புகார்
/
'அறையை மீட்டு கொடுங்கள்' மாவட்ட நீதிபதியிடம் புகார்
'அறையை மீட்டு கொடுங்கள்' மாவட்ட நீதிபதியிடம் புகார்
'அறையை மீட்டு கொடுங்கள்' மாவட்ட நீதிபதியிடம் புகார்
ADDED : ஆக 22, 2025 01:30 AM
திருச்சி:வக்கீல்கள் சங்க அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளதாக, பெண் வக்கீல்கள் மீது மாவட்ட நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெண் வக்கீல்கள் சங்கம் செயல்படுகிறது. இச்சங்கத்துக்கு வழங்கப்பட்ட அறையை, சில பெண் வக்கீல்கள் தங்கள் அலுவலகமாக மாற்றி பயன்படுத்துகின்றனர். மற்ற பெண் வக்கீல்களை அந்த அறைக்குள் அனுமதிப்பதில்லை.
இதுகுறித்து, நேற்று, 100க்கும் மேற்பட்ட பெண் வக்கீல்கள் கையெழுத்திட்டு, மாவட்ட முதன்மை நீதிபதியிடம் புகார் அளித்தனர்.
பு காரில், 'திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில், 300 பெண் வக்கீல்கள் உள்ளோம். சிலர், பொது அறையை, தங்கள் அலு வலகமாக மாற்றியுள்ளனர். மற்ற பெண் வக்கீல்களை அந்த அறைக்குள் அனுமதிப்பது இல்லை. பெண் வக்கீல்கள், ஆண் வக்கீல்களின் அறைகளுக்கு சென்றே உடை மாற்றுதல், ஓய்வு எடுத்தல் போன்றவைகளை சங்கடத்துடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இன்று அந்த அறைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த உள்ளோம்' என, தெரிவித்தனர்.