/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
விவசாய சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் என புகார்
/
விவசாய சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் என புகார்
ADDED : பிப் 18, 2025 04:24 AM
திருச்சி : திருச்சி மாவட்டம், மேலப்பேட்டையைச் சேர்ந்தவர் சின்னதுரை; தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர். மணப்பாறை தி.மு.க., ஒன்றிய செயலர் ஆரோக்கிய சாமி, விவசாயிகளை மிரட்டி, அடாவடியாக மண் மற்றும் மணல் கொள்ளையடித்தது குறித்து, திருச்சி கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்து வந்தார்.
ஆரோக்கியசாமி, அப்துல்லா ஆகியோர் கடந்த 13ம் தேதி மொபைல்போனில் அழைத்து, இனி மணல் கொள்ளை விஷயத்தில் தலையிடக்கூடாது என மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக, போலீசிலும், ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ.,விடமும், சின்னதுரை புகார் தெரிவித்துள்ளார்.
சின்னதுரை கூறுகையில், ''மண் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் சட்டசபை வாசலில் உண்ணாவிரதம் இருப்பேன்,'' என்றார்.

