/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சத்துணவு முட்டைகளை உடைத்து ஆம்லெட் வியாபாரம் அமோகம் துறையூர் ேஹாட்டலுக்கு சீல்

ADDED : செப் 20, 2024 01:56 AM

திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூரில், ரத்னா ேஹாட்டல் என்ற பெயரில் உணவகம் உள்ளது. இங்கு, அரசால் வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை, சீலுடன் அட்டைகளில் அடுக்கி வைத்து, 'ஆம்லெட்' தயார் செய்வதாக தெரிய வந்தது.
திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், அந்த ேஹாட்டலில் ஆய்வு நடத்த, உணவு பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வில், அரசு முத்திரையுடன், சத்துணவு முட்டைகள், அந்த ேஹாட்டலில் இருந்ததை பார்த்து, பறிமுதல் செய்தனர். மேலும், அந்த ேஹாட்டலை பூட்டி, 'சீல்' வைத்தனர்.
அரசு அதிகாரிகள் கூறியதாவது:
சத்துணவு முட்டைகளை, ஒரு முட்டை இரண்டு ரூபாய் என ேஹாட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்து உள்ளனர்.
இது தொடர்பாக போலீசாரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்த புகாரில், ேஹாட்டல் உரிமையாளர் ரத்தினம், 46, அவருக்கு முட்டை விற்பனை செய்த, துறையூர் மதுராபுரி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி, 58, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
மாவட்டம் தோறும், பள்ளிகளில் சத்துணவு முட்டை 'ஸ்டாக்' குறித்து ஆய்வு நடத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.